புதியதோர் உலகம் செய்வோம்

பெண்...
இரண்டெழுத்து மந்திரம்
உலகத்தை உருவாக்க படைக்கப்பட்ட
பிரம்மனின் புதல்வி இவள்...!

அவள் பெருமையை சீர்குலைத்து
வாழ்வை சீரழிக்க ...
வீதிதோறும் ஒரு கள்வர் கூட்டம்...!

நேற்று நிர்பாயா...
இன்று ஜிஸா....
நாளை யாரோ....??

மிருகங்களின் வெறிகொண்ட
இச்சைக்கு புசிக்க...
பெண்கள் என்ன
வெறும் சதைபிண்டங்களா ??

வெளியில் சென்ற பெண்
உயிரோடு வருவாளா ??
கேள்விகள் இங்கே
வேள்விகளாய்...?

சில கயவர் இருப்பதலோ...?
பூமித்தாயும் அடிக்கடி
சீறுகிறாளோ ?

கண்ணீர் விட்டு கதறியழும்
என் சகோதரிகளின்
அவல ஓசை ...
உம் காதுகளுக்கும்
எட்ட வில்லையா இறைவா ?

என்றேனும்
ஒருநாள்...
பெண் எனும் குலத்தரசி
நிம்மதியாக வீதியிலே
நடமாடமுடிகிறதோ...
அன்றே புது விடியல்....
அதுதான் புதிய உலகம்....!

புதியதோர் உலகம் படைப்போம்...!

- கீதா பரமன்

எழுதியவர் : Geetha paraman (10-May-16, 11:46 pm)
பார்வை : 545

மேலே