வலியோடு வெற்றி - போட்டிக்கவிதை

மரணத்தின் விளிம்பு வரை தான் சென்று
மழலையைப் பெற்றெடுத்து
வலியோடு வெற்றி காண்கிறாள் தாய்.
அனுதினமும் வலிகளை தாங்கி
வலிகளின் சுவடுகளை உள்ளத்தின் ஒரு ஓரத்தில் மறைத்துவைத்துவிட்டு
நிற்காமல் பணத்தை தேடி ஓடும் துரத்தலில்
தந்தையை வெற்றி பெற வைக்கிறான்
பட்டம் பெற்ற மகன்.
நடக்கின்ற முயற்சியில் தடுமாறி கீழே விழுந்து
அழுதுகொண்டே மீண்டு(ம்)
எழுந்து நடக்கையில் வெற்றி காண்கிறது குழந்தை.
தடுமாறும் தந்தையில்லா குடும்பங்களில்
கடல் கடந்து போய்
கனவுகளை காசாக்கி
கரைசேர்க்கிறான் குடும்பத்தை இளைஞன்.
சுமைகளை தாங்கும் தொழிலாளி
கேள்விகுறியானது அவர் முதுகு
விடையாய் கிடைத்தது அடுத்தநாள் கஞ்சி.
வானம் பார்த்து
வியர்வையை விதைத்து விலையாக்கி
பசித்தோர் சாப்பிட
வெற்றி காண்கிறார் விவசாயி.
பனியிலும் வெயிலிலும்
பகைவனோடு போரிட்டு
கடைசியில் உயிரையும் விட்டு
நாட்டிற்கு பெருமை சேர்த்து
வெற்றி காண்கிறார் ராணுவ வீரன்.
இப்படி இன்னும் பலர்
வலியோடுதான் வெற்றி காண்கிறார்கள்.
வலியும் வெற்றியும் பிரிக்க முடியாதவை.
அடிபட்ட துணிதான் வெளுக்கும்.
மண்ணைமுட்டி வந்த விதைதான் முளைக்கும்.
இடிக்கு பின் மழை
இருளுக்கு பின் பகல்
வலிக்கு் பின் வெற்றி.
வலிகளை தாங்கி கொள்.
வாழ்க்கை வசப்படும்.
வழிகள் பிறக்கும்
வெற்றிகள் வந்து சேரும்.
வலியோடுதான் வெற்றி.
- அரவிந்த்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
