உடல் தானம்
மரணம் ...
இது பெருமை பேச வைக்கும்...
கண்ணீர் விட வைக்கும்...
போற்றவும் வைக்கும்...
தூற்றவும் வைக்கும்...!
என்னையும் தேடி வந்தது
அவசரமாய் சாலை கடக்க
எத்தனித்தேன்...
லாரியின் சக்கரத்தில்
நான் சிக்கி சிதையுண்டேன்...!
இரத்தம் பெருக்கெடுக்க
சாலையில் விழுந்துக்கிடந்தேன்...
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்...
அவசர சிகிச்சை பிரிவில் நான்....
உறவினர் கூட்டம் திணரடித்தது...!
எதற்கெடுத்தாலும் கோபப்படும்
மனைவியும்...
எப்போதும் எதிர்த்துப்பேசும்
பிள்ளையும்...
பார்க்கும்போதெல்லாம் முறைக்கும்
மச்சானும்...
சதா சண்டைபோடும்
பக்கத்துவீட்டுக்காரரும்...
கதறி அழுகிறார்கள்...!
என்னைப்பார்த்து குரைக்கும்
என் வீட்டு நாய்குட்டி கூட
அழுததாம் ....
எல்லாரும் சொல்றாங்க...!
எனக்கு கொஞ்சம் கர்வமா இருக்கு...
என் மேல இவ்வளவு அன்பா...?
கண்ணீரும் கண்ணை நனைக்குது
அப்படியே எழுந்து வர தோணுது....
கை , காலை அசைச்சு பாக்குறேன்...
என்னால ஒண்ணும் முடியல ...!
மருத்துவர் பார்த்துட்டு சொன்னாரு ..
மூளை சாவாம்..
இனி பிழைக்க வாய்ப்பில்லையாம்...!
பையன் மட்டும் சொல்றான்
என் உறுப்புகளை தானமா கொடுக்கலாமாம்...
எல்லாரும் வேண்டாங்குறாங்க...
எம் பொண்டாட்டி மட்டும்
அழுதுட்டே தலையாட்டுறா...!
செத்ததும் ...
நெருப்போ ...புழுவோ
திங்கப்போற உடம்புதானே...?
உசிருக்கு போராடுற யாரோ
பிழைக்கட்டும்...!
நான் செத்துட்டேன்...
என்னால ஏழு பேர்
வாழ்றாங்க...
வாழ்வை பெற்றவன்
வாழ்த்துறான்..
என் குடும்பம் நல்லாயிருக்க...!
வேறேன்ன வேண்டுமெனக்கு...??
சந்தோஷமா சாமிகிட்ட போறேன்....
- கீதா பரமன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
