எனக்கு நீதான் உலகம்
எங்கோ பிறந்த நீ,
எங்கோ பிறந்த நான்
எங்கோ பார்த்த பார்வை
என்றோ சிந்திய புன்னகை
இடையில் மலர்ந்த காதல்
மௌனமாய் பேசிய நாட்கள்
எரிமலையாய் நின்ற தடைகள்
எதிர்ப்பலையாய் நின்ற உறவுகள்
இவற்றை எல்லாம் தகர்த்து
எதிர் நீச்சல் போட்டு
உன் கரங்களை பற்றிவிட்டேன்
இந்த உலகுக்கு நீ யாரோ ஒருத்தி
ஆனால் எனக்கு நீதான் உலகம்!