அம்மா அம்மா அம்மா
அம்மா!! அம்மா!! அம்மா !!
உலகிலே உயர்ந்தவள் நீதானம்மா !!
உறவிலே சிறந்தவள் நீ தானம்மா !!
அன்பான ஆலயம் நீதானம்மா !!
ஆபத்தில் அனைப்பவள் நீதானம்மா !!
ஆகாயம் சென்றாலும் !!
அதிசயம் புரிந்தாலும் !!
அன்பாக எப்போதும் உன் துணை வேண்டுமே !!
அழுதாலும் வலித்தாலும்
தனியாக தவித்தாலும்
உன் நினைவோடு நான் உறங்க மடிவேண்டுமே !!
உன் உயிரோடு நான் கலந்து
கருவாக நான் வளர்ந்து
உன்னாலே உருவான சேய் நான் தானம்மா !!
பிறப்புக்கும் இறப்புக்கும்
நான் பெற்ற வாழ்வுக்கும்
எப்போதும் நீ தாய் தானம்மா !!
உன்னாலே உருவாகி
உலகத்தில் உயர்வாகி
உனை மறந்து வாழ்ந்தால் மடிவேனம்மா !!
நிழலாக நீ வேண்டும்
நிஜமாக துணைவேண்டும்
எப்போதும் பிரியாத வரம் வேண்டுமம்மா !!

