ஒத்தையடிப்பாதை

ஒத்தையடிப்பாதையிலே
நானும் நீயும் நடக்கையிலே
எங்காலடித்தடமாய் நீயானாய்
உன்மூச்சுக்காற்றாய் நானானேன்
முன்னே சென்ற ஆடும் மாடும்
நம் பாதம் நடக்க வழிவிட்டது
நம் நெருக்கம் கண்ட சூரியன் கூட‌
மாலை வரும்முன்னே நழுவிட்டது
மரத்தின் மேலே காகமும் குருவியும்
கிசுகிசுகிசுவென நம் கதை தானோ பேசியது
தென்றல் கடக்க நாம் வழிவிடாததால்
நம்மை முறைத்தே ஏசியது
இந்தப் பாதை நம் பந்தப்பாதையானது
நம் காதல் காலத்தில் சொந்தப்பாதையானது
இப்பாதை மேலே நமக்கோ மிகப்போதையானது
இப்பாதையில் நடக்கா தினங்கள் நமக்கு வாதையானது

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-May-16, 7:39 pm)
பார்வை : 1187

மேலே