காணாமல் போன மகிழ்ச்சி

ஏன் இத்த மாற்றம். ..
எதர்க்காக இந்த வேடம். ..

சிசுவாக இருந்தேன். ..
சின்ன சிரிப்பில் தவழந்தேன்..

எங்கும் மகிழ்ச்சி...
எதிலும் மகிழ்ச்சி. ..

அன்னை மடி மகிழ்ச்சி. ..
அண்ணனுடன் ஊர் சுற்றும் மகிழ்ச்சி. ..
கோபத்தில் தம்பியை உதைக்கும் மகிழ்ச்சி. ...-இதை விட
தந்தையின் தோள் மீது அமரும்
சுகம் மகிழ்ச்சி. ...

ஏன் இந்த மாற்றம். ..
ஏன் இந்த பருவம். ...

பருவம் வந்தது. .கூடவே
பரபரப்பான வாழ்க்கை வந்தது. .

காசு வந்தது. ..கூடவே
கௌரவமும் வந்தது. ..

இத்தனை வந்தும் பயனில்லை. .
என் மகிழ்ச்சி மட்டும் காணவில்லை. ...

எழுதியவர் : மோகன் சிவா (13-May-16, 7:51 pm)
பார்வை : 130

மேலே