காவடிச்சிந்து 6

வேகத்தை தாழ்த்திடு வாயே - நீயும்
விவேகம் பெற்றிடு வாயே - நல்
விளைவேதர நலமேபெற வளமேவர விழியாமதை
வைத்திடு - நலம்
ஏத்திடு


வாகனம் ஒட்டிடும் போது - என்றும்
வைத்திடு கண்ணதன் மீது - வாழ்வில்
வளஞ்சேர்த்திட உயிர்வாழ்ந்திட நலமோங்கிட சாலையாமதில்
விழிப்பாய் - உயிர்
காப்பாய்


கவிதையாக்கம்;திருமதி.மஞ்சுளாரமேஷ்

எழுதியவர் : மஞ்சுளாரமேஷ் (13-May-16, 11:54 pm)
பார்வை : 63

மேலே