இன்னொரு தாஜ்மஹாலுக்கான அஸ்திவாரம்

கள்ளத்தனமாய்க் காய்ச்சிய
சாராயத்திற்கு ஊருகாயைபோல்
தொட்டுக்கொள்கிறான் குடிகாரன்.

நல்லவிதத்தில் கிடைத்த
சாராயத்திற்கு கலவை பானமாய்
கலந்துகொள்கிறான் சற்றே
வசதி நிறம்பியவன்.

அதிகாலை ஆகாரமாய்
அருந்திவிட்டுப் போகும்
பழங்கஞ்சிக்கு பச்சமிளகாயாய்
கடித்துக்கொள்கிறான் கமக்காரன்

கடைத்தெருவில் கிடைக்கின்ற
குளிர்பானங்களுக்கு
உறிஞ்சும் குழாயாய் உபயோகித்துத்
தூக்கிப்போட்டுப் போகிறான்
நாகரிக இளைஞன்.

பொழுது போக்கும் சமூக வலைத்தளங்களில்
எவருடையதாவது கவிதையைத் திருடி
ஒட்டி பதிவிட்டு பெருமகிழ்ச்சி கொள்கிறான்
சமகால மாணவன்

ஒரு குத்துப்பாட்டை உருவாக்கி
இளசுகளை கவர்ந்திழுத்து
ஆட்டம்போட வைக்கிறது சினிமா

நவீனத்துவத்தின் முதுகில்
சவாரி விட்டுக்கொள்கின்றக்
ஈசலாய் பரவிக்கிடக்கும் சமகால காதல்
ஊர்த்திருவிழாக்களில்
கண்களினால் உரசிகொள்கிற தீப்பொறிகளில்
உயிரை எரிக்கின்ற தெய்வீகம் பொதிந்து
ஏதாவதொரு கிராமத்தில் கண்டாங்கி அணிந்து
ஜல்லிக்கட்டுக்காரனுடைய வீரத்தில்
மயங்கத் தவமிருக்கலாம்
யார் கண்டது இன்னொரு
தாஜ்மகாலுக்கான அஸ்திவாரம்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-May-16, 2:54 am)
பார்வை : 67

மேலே