நிலவே நீயாய் இருக்கும் போது
நிலவை நான் காண முடிவதில்லை
சில நேர மேக கூட்டங்களின் மறைவில்!
நிலவை நான் காண முடிவதில்லை
தேய்பிறை நாட்களில் நிலவு வராததால்!
நிலவை நான் காண முடிவதில்லை
மழைக்கால கருமேகங்களூடே இரவுகளில்!
நிலவை நான் காண முடிவதில்லை
மலைமுகடுகளில் மறைந்து விடும்போதும்!
நிலவை நான் காண முடிவதில்லை
நான் உறங்கச் செல்லும் பின்னிரவுகளிலும்!
நிலவை நான் காண முடிவதில்லை
என் அன்பே! உன்னை நான் கண்ட பின்பு!
வெண்ணிலவை நான் காண முடிவதில்லை!
நிலவே நீயாய் இருக்கும் போது!