கூண்டுக் கிளி மாயா அஞ்செலொவ் எழுதிய caged bird, தமிழாக்கம்

கூண்டுக் கிளி
--------------------

சுதந்திர பறவை அது

பெருங்காற்றிலும் பாய்ந்து பறக்கிறது

அந்த காற்றின் வீர்யம் குறையும் வரை

அந்த பரந்த வானிலே மிதக்கின்றது ;

அதன் சிறகுகளை அங்கு

ஆதவன் வெளிறிய மஞ்சள் ஒளிக்கற்றை

அழகக்கு அழகாய் நினைகின்றன !

இதோ இப்போது அப்பறவை எழிலாய்

சுதந்திரமாய் விண்ணோக்கி பறக்கின்றது !


அங்கு பார் ; மற்றோர் வண்ணக்கிளி

சிறகு சிதைக்கப்பட்டு , கால்களும் கட்டுண்டு

கூண்டில் அடைக்கப்பட்டு செயல் இழந்து

கோபத்தால் கூண்டின் கம்பிகளை

கொத்திக் கொத்திக் குதறுகிறது

அலுத்து ஓய்ந்த பின்னே

அங்கு அந்த கூடிநின்று

சோக கீதம் விண்ணிலே மிடக்கின்றது .


கூண்டுக் கிளி பாடுது

இல்லை ;விக்கி விக்கி

அவலமாய் கூவுது அங்கே

தன அவல கீதத்தை யாரேனும்

கேட்பாரோ என்றெண்ணி

மீண்டும் மீண்டும் கூவுது

அந்த தூரத்து மலைவரை

அந்த கீதம் சென்றடைந்து

எதிரொலியாய் பின்னே

அப்பறந்த வெளியில் எதிரொலிக்குது

யார் கேட்பார் அந்த சுதந்திர தாகத்தால் வந்த

அதன் சோக கீதம் !


அங்கோ அந்த சுதந்திரக் கிளி

இன்னும் ஒரு தென்றல் வந்து

தன்னை வானில் இன்பமாய்

மிடக்க வருமா என்று எண்ணி

இன்பமாய் கிடந்து அந்த

புள் வெளியில் தெரியும்

கொழுத்த புழுக்களை

தின்ன கனவு காண்கிறது !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-May-16, 1:11 pm)
பார்வை : 57

மேலே