உயில்

உயில்
""""""'''"
இப்பவோ" எப்பவோ "என்று
இழுத்துக்கொண்டுருக்கும்
ஒரு முதியஉயிரிடம்
அவசர கையெழுத்து
வாங்கவேண்டும் என்ற
அவசியம் அதிகம் இருக்கும்!

பாலை தொட்டு நாவில்
வைத்து சீவனை
அவசரத்தில்
அனுப்பி வைப்பதில்
குறி தவறுவதும்
உண்டு!

இருட்டின பார்வையில்
மங்கலான உருவங்களின்
அங்கலாய்ப்பும்
வாக்குமூலங்களில் யார்
யாருக்கெள்ளாம்
சொத்துக்கள்
தவறியிருக்குமோ""
என்ற பயத்தை முன்வாசல்
பல்லி எப்பவோ
சொல்லியிருக்கும்!

கடைசி நிமிடங்களில்
உனக்காக என்ன செய்தேன்?
என்ற ஆதங்கம் கண்ணீரில்
கரைந்து மூச்சு அமைதியாக
காற்றில் கலந்துகொள்ளும்!

உன் சம்மதம் இல்லா
மௌனத்தை தவறாக
புரிந்துகொண்டோமா?
என்ற சந்தேகத்தை
ஆழ்மனசு ஆன்மாவிடம்
அடிக்கடி
கேட்டுக்கொள்ளும்!!!

லவன்
""""""""""""

எழுதியவர் : லவன் (14-May-16, 10:04 am)
Tanglish : uyil
பார்வை : 77

மேலே