போங்கடா பெரிய மனுஷங்களா

நேரத்துக்கு நிறமடிக்கும்
மனிதப் பிறழ்வுகளில்
காரணம் ஒன்றுமேயில்லை...
கடைசி வாய்
கஞ்சிக்கும் மாறும்...
கல்லச் சாராய மணத்துக்கும்
மாறும்...
பிணம் தின்னும் கழுகின்
விரல் பிடித்த
குருட்டுப் பிணிகளின்
மொத்தமென
உடல் முழுக்க உள்ளாடை
மூடிய மனிதன்தான்
காலத்தையும் திட்டுகிறான்
கனவுகளையும் திட்டுகிறான்...
சுயம் அறுக்கும்
துரோகக் குருதிகளில்
சொட்டியிருக்கலாம்
நம்பிக்கையின் உலை
சொட்டும் மனித
பாழ்களும்...
எதிர்க்காற்றில் நீந்தியவன்தான்
புதிர் உடைக்கிறான்..
புதிரோடு உங்கள் தத்துவ
மயிர்களையும்
உடைக்கிறேன் நான்...

போங்கடா பெரிய மனுஷங்களா...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (14-May-16, 10:03 am)
பார்வை : 138

மேலே