ஒரு தோழனாய் பிரிந்துப்போங்கள் - சந்தோஷ்

ஒரு நிறத்தில்
என்னை வைத்து
வேறொரு நிறமாக
பிரிந்து போனீர்கள்.

ஒரு மதக்காரனாக
என்னை பார்த்து
வேறொரு மதவாதியாக
பிரிந்துப் போனீர்கள்.

ஒரு ஜாதிக்காரனாக
என்னை மாற்றி
வேறொரு ஜாதிக்காரனாக
பிரிந்து போனீர்கள்.

ஒரு கட்சிக்காரனாக
என்னை எண்ணி
வேறொரு கட்சிக்காரனாய்
பிரிந்து போனீர்கள்.

ஒரு முறையாவது
ஒரு தோழனாக
எனை எண்ணி
ஒரு தோழனாக
என்னை விட்டு
பிரிந்துப் போங்கள்.

ஒரு மனிதனாக பிறந்து
சில மனிதர்களிடம்
பழகிய நிம்மதியோடு
கல்லறையில் தூங்குவேன்
அல்லது
மின்மயானத்தில் எரிவேன்.
**

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (14-May-16, 9:00 pm)
பார்வை : 310

மேலே