சித்திரை செல்வமழை
பொன் வானம் கருத்தது
படபடவென்று பேசியது
கருத்த மேகம் இடித்தது
மகிழ்ச்சியாய் மின்னியது
வரண்ட பூமி சிலிர்த்தது
மடமடவென்று சிரித்தது
கொட்டியது செல்லமழை
சித்திரை செல்வமழை!
சாலையோரப் பள்ளங்கள்
நிறைத்தன தண்ணீரை
வீதிகளோரம் நதிகள்
பாய்ந்தன பன்னீராய்
விழியோரம் நன்றிகள்
சொரிந்தன கண்ணீரை
கொட்டியது செல்லமழை
சித்திரை செல்வமழை!
சுபா சுந்தர்
Pic courtesy: commentsyard