தினம் ஒரு பாட்டு இயற்கை - 8 = 107

காற்றுக்கென்று வேலி அமைப்பவர் யாரென்று சொல் தோழா !
அமைப்பவர் இருந்தால் உனக்கு அவரை பிடிக்குமா என் தோழா?
ஏசி காற்று சுவாசப் பையை மாசுப்படுத்தும் என்னுயிர் தோழா…!
ஓசி காற்று உன் ஆயுளை அதிகரிக்கும் என்னன்புத் தோழா…… !

கோடைக் காற்று வாங்க ஜனங்க
கோடை வாசஸ்த்தலம் போகின்றது !
அங்கு வாங்கும் காற்றால்
ஜனங்க உஷ்ணம் பஷ்பம் ஆகின்றது !

தென்றல் காற்று பருவ குமரிப்போல்
மெல்ல வருடும் போது;
இதய நாற்று இரநூறு முறை
புதிதாய் முளைத்து சிலிர்க்கின்றது !

வாடை காற்று வாலிப மகனாய்
துள்ளி வரும் போது;
ஆடை கலைந்த அழகு மகள் போல்
ஆனந்த இன்பம் தருகின்றது !

புயல் காற்று புலவன் புளூகு போல்
புழுதியை பறக்க விடும்போது –
மழை தரும் மேகம் மனசாட்சி மறந்து
மழையை குறைத்துப் பெய்கின்றது !

மேல் காற்று மேக மகளின்
கூந்தல் கலைக்கும் போது
மலை முகட்டில் தலை வைத்து
மேகம் பள்ளிக் கொள்கின்றது !

சாரக் காற்று சங்கீத மகளாய்
சன்னல் நுழையும் போது
என்னவொரு சுக ராகமென்று
எல்லோர் நெஞ்சமும் சொல்கின்றது !

எதிர் காற்று எதிரியின் மகள் போல்
முறைத்து செல்லும் போது – அதை
எதிர்க்கும் திராணி துரும்பளவும்
எந்த ஜென்மத்துக்கும் கிடையாது !

சூரக் காற்று மாறன் மகளாய்
ஊரை சுற்றி வரும்போது
யாரைக் கேட்டு வந்தாயென்று
எந்தக் கொம்பனும் கேட்க முடியாது !

காற்றில்லையென்றால் மூச்சில்லை
மூச்சில்லையென்றால் பேச்சில்லை
பேச்சில்லையென்றால் மொழியில்லை
மொழியில்லையென்றால் இனமில்லை

எழுதியவர் : சாய்மாறன் (17-May-16, 4:05 pm)
பார்வை : 126

மேலே