IT - தொடர்ந்து குறையும் வேலை வாய்ப்புகள் – 4
தான் வாழ பிறரை கெடுக்கும் மனிதர்கள் (அனைத்து நிலைகளிலும்)
தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் பெரும்பாலும் மிகப் பெரிய திட்ட நோக்கம், இலக்கங்கள் இல்லாமல் தொடங்கப்படுகின்றன.(சிவாஜி : பார்த்த வேலை – Software Solution Architect).
அவைகள் தொடங்கப்படும் காலங்கட்டங்களில் அந்த இடங்களில் அங்கு என்ன மாதிரியான மனிதர்களும், படிப்புகளும் இருக்கின்றன. அவைகள் எப்படி பயன்பாடு இருக்கும் போன்ற விஷயங்களை நினைப்பது இல்லை.
நுட்பம் - 1
உ.ம் - B.C.A படித்த ஒருவன் மென்பொருள் துறையில் நுழைவதாக வைத்துக் கொள்வோம். மேலும் அந்த நிறுவனத்தில் 10 வருடம் அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கொள்வோம். இக்கால கட்டங்களில் அவனுக்கு அந்த நிறுவனத்தில் அனைத்து விஷயங்களும் தெரிந்து விடும்.
10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு Master Degree படித்த ஒருவன் அங்கு வரும்போது வரும் நபருக்கு அவன் அடிப்படை விஷயங்களை எதுவும் சொல்லித் தரமாட்டான். (எவனாக இருப்பினும் சொல்லித் தரமாட்டான் என்பது வேறு கதை.) இது matter of survival என்பதை முன்வைத்தது.
நுட்பம் – 2
நிறுவனத்தில் மேல் மட்டக் குழு விரிவாக்கம் பற்றி பேச கூடும்.
நம்ம நிறுவனத்தினை எப்படி விரிவுபடுத்தலாம். நல்ல idea குடுத்தா உங்களுக்கு promotion.
சார், நான் என்ன சொல்ல வரேன்னா, நம்ம Mr.X இருக்கானே, அவன் குடுக்ற வேலையை மட்டும் செய்யறான். அவன கழட்டி விட்டா 12 லட்சம் மிச்ச மாகும். அவனுக்கு பதிலா 2 லட்சத்தில 4 பேர வேலைக்கு எடுத்துக்கலாம். நம்ம Mr.Y க்கு புரொமோஷன்னு சொல்லி அவனுக்கு 3 லட்சம் கொடுத்தா 11 லட்சத்தில எல்லாம் முடிச்சிடும் சார்.
நுட்பம் – 3
தற்போதைய காலங்கட்டங்களில் (பொதுவாக) 32 - 35 வயது என்பது மனிதர்கள் வாழத்துவங்கும் காலம். எல்லா நிறுவனங்களுக்கும் இது தெரியும். எல்லோரும் அங்குதான் கை வைக்கிறார்கள். ‘புடிச்சா வேலை பாருங்க, புடிக்கலைன்னா, பேப்பர் போட்டுட்டு போக வேண்டியது தானே’ இவ்வாறு மன அழுத்தம் உண்டாக்கி வெளியே தள்ளப்படும் வகைகளும் உண்டு..
நுட்பம் – 4
இருக்கும் இடங்களில் மிகச் சிறந்த நட்புக்கள் (வேறு என்ன சொல்ல) உண்டாவது உண்டு.
எனக்கு ஏதாவது புமோஷனுக்கு ஏற்பாடு செய்ய மாட்டீங்களா?
கவலைய விடு டியர், நம்ம Mr. X இருக்கான்ல, அவனை ‘வேலையே செய்யாதவன்’னு சொல்லி அடுத்த மாசம் தூக்றோம். அப்புறம் நீ தான் Team Leader.
அவர் 10 வருஷமா இங்க இருக்காறே?
நீ ஏன் அதப் பத்தி கவலைப்பட்ற. இப்ப ஏதாவது Treat உண்டா?
நுட்பம் – 5
ஒரு நிறுவனத்தில் இருந்து ஒருவரை வெளியே தள்ள பல காரணங்களைத் தேடுவார்கள்
• Proper in time (out time பற்றி கவலை இல்லை). சத்தியமாகச் சொல்கிறேன்.
• வேலைகளை குறித்த காலத்தில் முடித்துக் கொடுக்கும் திறமை
• வேலை விடுப்பு எடுத்த நாட்கள்
• எதிர் பால் மக்களுடன் கொஞ்சம் முன்னுக்கு பின்னாக இருத்தல்
• மற்றவர்களும் பழகும் தன்மை
மேற் கூறியவைகள் எவையும் இல்லை எனில் 10 வருடங்களுக்கு பிறகு 'வேலையே செய்யவில்லை' என்று உண்மையை கண்டறிதல்.
நுட்பம் – 6
மச்சான்(பாசக்கார பய புள்ளங்க), அவன எப்டி வேலை விட்டு விரட்டுரதுன்னு தெரியலடா?
டேய், நம்ம கிட்ட 6 மாசத்துக்கு எல்லாருக்கும் work load details இருக்கு. DB ல work load hours ஐ குறைச்சி போடு. 2 வாரத்து milestone ஐ 1 வார milestone ஆ போடு. இத தவிர daily milestone தினமும் 2 போடு. ஓடியே போய்டுவான்.
சூப்பர் ஐடியா மச்சான். வா ஒரு பீர் சாப்டு இன்னும் பேசுவோம்.
இங்கு பிரதானமாக இருப்பது 'வேலை செய்யவில்லை' என்பதை கண்டுபிடிப்பது தான்.
அடுத்த பதிவு :பொருளாதார சீர்திருத்தம்/முன்னேற்றம் முன்வைத்து
தொடரும்...