நாளும் பொழுதும் ஹைக்கூ-3

மலைவழி செல்லும் மின்
கம்பியில் கருங்குருவியின் பாடல்
அடைமழை
--------------------------------------------
சிறு மலைக்குன்றில்
எருக்க மலர்களின் மணம்
தூறல் ததும்பும் காற்று
--------------------------------------------
கருங்கல் குவியல்
மலையில் வழியும் மழை
தாழப் பறக்கும் தும்பிகள்
--------------------------------------------
அடைமழையில்
நனையும் ஊமத்தம் பூவிதழில்
நீர்பருகும் வண்டு
--------------------------------------------
கிளிகளின் சல்லாபத்தில்
ஒருகணம் நின்று திரும்புகிறது
மழை விழும் சப்தம்
--------------------------------------------
இளவேனில் மழை
பூக்களற்ற ஆவாரங்காட்டில்
நனைந்து மேயும் ஆடுகள்
--------------------------------------------
தைல இலையில்
தோய்த்தெடுத்த காற்று
தொடர் தூறல்

எழுதியவர் : சுஜய் ரகு (17-May-16, 4:50 pm)
பார்வை : 235

மேலே