அந்தப் பொண்ணு அந்தி நேரத்தல மது அருந்துமா
ஏண்டா அந்த எதிர் வீட்டுப் பொண்ணு படிச்சவ மாதிரி இருக்கறா. இந்தக் காலத்தில சில பள்ளி மாணவிகளே மது அருந்திட்டு வகுப்புக்குப் போனதாகவும் பொது எடங்களில போதையிலே தள்ளாடினதையும் தொலைக்காட்சி செய்தில காட்டுன்னாங்க..
#@#@
ஆமா. நாங் கூட அந்தக் காட்சியைப் பாத்தேன்.
@@@
அதனாலதான் கேக்கறேன். நா குறிப்பிட்ட பொண்ணு அந்தி நேரத்தில மது அருந்துவாளா? அவ பேரு என்னவோ தெரியாது. ஆனா அவள எல்லாரும் மதவந்தி - ன்னு கூப்படறாங்க. அது தான் கேட்டேன்.
@@@@
போடா முட்டாள். அந்த பொண்ணு ரொம்ப ஒழுக்கமான நல்ல குடும்பத்து பொண்ணுடா. அவ பேரு மதுவந்தி - ங்கற இந்திப் பேரு. மதுவந்தி - ன்னா தேன் போன்று இனிமையான -ன்னு அர்த்தம்டா.
#@@@@
ஓ.... அப்பிடியா. அந்து மது, அந்திங்கற வார்த்தைங்க என்ன ரொம்பக் கொழப்பிடுச்சுடா