சச்சு வந்து சச்சு வந்து

டேய் சச்சு வந்து, சச்சு வந்து, எங்கடா செல்லம் போயிட்ட?
@@@@@
இதோ வந்திட்டேன் தாத்தா. எம் பேரு ஜஸ்வந்த் - சச்சு வந்து போயி எல்லாம் கெடையாது.
@@@@@
அட சச்சு வந்து, வந்து நா சொல்லறது என்னன்னா. தாய் மொழிப் பேர வைக்கறவங்கதாண்டா தன்மானம் உள்ளவங்க. உன்னோட பேரு இந்திப் பேரு. இந்திக்காரங்க யாராவது அவுங்க பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேர வச்சிருக்காங்களா?
@@@@@
இல்லீங்க தாத்தூ.
@@@@@
அப்ப அவுங்களப் பாத்து நாம திருந்தணும். சரி சச்சு வந்துங்கற பேருக்கு என்னடா அர்த்தம்?
@@@@@#
அந்தப் பேரோட அர்த்தம் என்னப் பெத்தவங்களுக்கே தெரியாது. ஒரு இந்தி ஆசிரியர்கிட்ட அதப்பத்திக் கேட்டன. அவுரு தா சொன்னாரு. ஜஸ்வந்த் - ன்னா வெற்றிகரமான, பாராட்டுக்குரிய - ன்னு அர்த்தமாம்.
@@@@@

ஓ..... அப்பிடியா. அப்பிடின்னா உனக்கு வெற்றி, வெற்றிவேல், வெற்றிச் செல்வன், வெற்றிமாறன், வெற்றிக்கனி, வெற்றியாளன், வெற்றிக்கதிர், வெற்றிஒளி - ன்னு அழகான ஏதாவது ஒரு பேர வச்சிருக்கலாமே. உங்கப்பனும் ஆத்தாளும் நம்ம செம்மொழி உலகின் முதல் மொழி தமிழ்ப்பேர உனக்கு வைக்காம கண்ட கலப்பட மொழிப் பேர வச்சு உன்னையும் நம்ம செமாமொழியையும் அசிங்கப்படுத்திட்டாங்களே. எல்லாம் சினிமா மோகத்தில சீரழியறாங்கடா வெற்றி.
#@#ஃ
தாத்தா இனிமே என்ன வெற்றின்னே கூப்பிடுங்க. அம்மா அப்பாகிட்டச் சொல்லி எம் பேர மாத்தச் சொல்லறேன்.
@@@@@
சரிடா வெற்றி.

எழுதியவர் : மலர் (18-May-16, 10:50 am)
பார்வை : 119

சிறந்த நகைச்சுவைகள்

மேலே