சுத்தீசு சுத்தீசு - டேய் சுத்தீ இங்க வாடா

சுத்தீசு சுத்தீசு, டேய் சுத்தீசுக் கண்ணா இங்க வாடா.
@@@
பாட்டி எம் பேரு சுதீஷ். என்ன நீங்க சுத்தீசு, சுத்தின்னெல்லாம் கூப்பிட்டு அசிங்கப்படுத்தாதீங்க.
##@
ஏண்டா பேரா நம்ம தாய் மொழி செம்மொழி. அதுல நல்ல பேருக்கா பஞ்சம். சுத்தீசுங்கற இந்திப் பேர வச்சு உங்க அப்பனும் உன்னோட ஆத்தாளும் உன்னையும் நம்ம செம்மொழியையும் கேவலப்படுத்தீங்கடா. சரி உம் பேருக்கு என்னடா அர்த்தம்?
@@
சுதீஷ்-ன்னா அறிவுக்கடவுள் -ன்னு அர்த்தம் பாட்டி.
@@#
நல்ல அழகான பேரு தான் அறிவுக்குக் கடவுள். அந்தப் பேரையே உனக்கு வச்சிருக்கலாம். இல்லன்னா அறிவுச்செல்வன், அறிவொளிங்கற அழகான தமிழ்ப் பேருங்களக்கூட வச்சிருக்கலாம்.
@@@@
நா என்ன பாட்டி செய்ய? என்னோட அம்மா அப்பாவ கேளுங்க.
@@#@

?????

எழுதியவர் : மலர் (18-May-16, 12:16 am)
பார்வை : 111

சிறந்த நகைச்சுவைகள்

மேலே