நான் மீண்டெழுந்தால்

என்றும் மிகவும் சரளமாக
கவிதை எழுதும் என் விரல்களின் வேகம்.....
இன்றோ வார்த்தைகள் கோர்த்து
இனிமையாய் எழுத மிகவும் தடுமாறுகிறது!!.......
காரணம்
நீ தான்...
ஆம் நீயே தான்!!..
என் மனமெங்கும்
உன் நினைவொன்றே இருப்பதால்!!.......
எனை மன்னித்து விடு
என் இனியவளே .......
இம்முறை மட்டும்
இக்கிறுக்கனின்
இக்கிறுக்கல்கலை ஏற்றுக்கொள் !!!.....
சரியான கோர்வைகளோடு எழுத்து பிழையின்றி
மீண்டும் எழுத தொடங்குவேன்
என்றாவது ஒருநாள் ......
என் மனதில் உள்ள என்றும் மீளா.............
உன் நினைவுகளில் இருந்து
நான் மீண்(டும்)டெழுந்தால்!!!.....