காதலே உன்னை செதுக்குகிறேன்--முஹம்மத் ஸர்பான்

தேவதையே!
சாலையை முகத்திரை
அணியாமல் கடக்கமுயலாதே!
வெண் மஞ்சும்
பஞ்சுடலில் ஒட்டிக் கொள்ளும்.

பட்டாம்பூச்சி சிறகுகளை
கடவுளிடம் விலைக்கு வாங்கி
இமைகளை நூலாக்கி
ஆடை தைத்து தருகிறேன்.
என்னால் முடியும்
நான் கவிதைக் காரன்.

இதயத்தின் துடிப்புக்களை
எண்ணிப்பார்த்து கணிதத்தில்
காதல் தேற்றம் நிறுவிக்காட்டுவேன்.
என் நெஞ்சில் காதல் ஜோதி
ஏற்றி விட்டு வேண்டாமென்று
அணைத்துச் சென்றால்
என் கதி பாவம் என்னவாகும்.

கவிதைக்கும் தமிழ்
பேசத்தெரியும் என்பதைப் போல
உன் பூவிதழ் வார்த்தைகளை
நயம் பட கேட்டுக் கொண்டு
திறன் பட என் தமிழுக்குள்
இறுகக் கட்டிக் கொண்டேன்.

சிவப்புக்கள் சித்திரமே!
என் இதயம் பத்திரம்
நோகாமல் பார்த்துக் கொள்
அடுத்த மடலில் நலம் கேட்பேன்
காதலே உன்னை செதுக்குகிறேன்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (18-May-16, 1:12 pm)
பார்வை : 158

மேலே