ஏன் இருக்கக் கூடாது

❓❓❓❓❓❓❓❓❓❓❓


*ஏன் இருக்கக்கூடாது ?*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

❓❓❓❓❓❓❓❓❓❓❓

உதிர்வதும்
மலர்வதும்
செடியின் வாழ்க்கை...

உதிப்பதும்
மறைவதும்
கதிரவனின் வாழ்க்கை ....

தேய்வதும்
வளர்வதும்
நிலவின் வாழ்க்கை...

விழுவதும்
எழுவதும்
அலையின் வாழ்க்கை.....

புயலாவதும்
தென்றலாவதும்
காற்றின் வாழ்க்கை.....

இன்பவும்
துன்பமும்
ஏன்
மனிதனின் வாழ்க்கையாக
இருக்கக் கூடாது....?

*கவிதை ரசிகன்*

❓❓❓❓❓❓❓❓❓❓❓

எழுதியவர் : கவிதை ரசிகன் (22-Jun-24, 7:05 pm)
பார்வை : 38

மேலே