திரும்பிப் பார்
திரும்பிப் பார்; திரும்பிப் பார்;
உன்னையே நீ திரும்பிப்பார்;
சாவாகாசமாக ஆசுவாசப்படுத்தி
சற்று நின்று நிதானமாகத் திரும்பிப்பார் ; வாழ்க்கை புத்தகத்தின் பக்கங்களை பக்குவமாய் புறட்டி திரும்பிப்பார்;
படிப்பினை பெறவே திரும்பிப் பார்,
பயணித்த பாதையை அறிய திரும்பிப்பார்;
நண்பன் எதிரி பகைவன் விரோதி துரோகி நல்லவன் கெட்டவன் நியாயக்காரன் அநியாயக்காரன்
பாசக்காரன் ரோசக்காரன், பாவி அப்பாவி பக்கிரி பக்திமான்
என்று பண்முக வேடம் தரித்துத் திரியும் மனிதனே திரும்பிப்பார்;
திரும்பிப்பார்
உன்தேடலில் திகைப்புத் தெரியும்;
உன் தேடலின் தவிப்புத் தெரியும்;
திரும்பிப் பார்; திரும்பிப் பார்;
நீ ஓடிய ஓட்டத்தின் வலியும் வலிமையும் ;
வடுக்களும் சுவடும் தெரியும்;
திரும்பிப்பார் திரும்பிப்பார் கடந்த காலத்தை சற்றே திரும்பிப்பார்;
நடந்து வந்த பாதையை, கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப்பார்,
தோல்வியின் வலி தெரியும்;
தோள்கொடுத்த சில நல் உள்ளங்களின் கருணை தெரியும்;
நெகிழ்ச்சியும் இகழ்ச்சியும் தெரியவரும்;
உன்னை தோற்கடித்தவனின் குணம் தெரியும்;
திரும்பிப்பார் தைரியமாகத் திரும்பிப்பார்,
நீ இழந்தவைகள் நினைவுக்கு வரும்;
நீ கடந்து சென்ற கஷ்டங்கள் கட கட வென்று நினைவுக்கு வரும்;
திரும்பிப்பார் திரும்பிப்பார் பயம் இன்றி திரும்பிப்பார்;
சோகத்தின் தடையம் தெரியும் ;
சொந்தத்தின் சுகம் தெரியும்;
தியாகத்தின் திடம் தெரியும்;
நீ கேட்ட வார்த்தைகளின் வலியும் வடுதெரியும்;
நீ தேடும் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்;
இன்று நீ வாழும் வாழ்க்கையின் துவக்கம் தெரியும்;
நீ கண்ட தயக்கம் குழப்பம் தெரியும்;
பட்ட பாடு தெரியும்,
பயணத்தின் நீளம் தெரியும்;
பணத்தின் செல்வாக்கு புரியும்;
பயத்தின் பாரம் தெரியும்;
செய்த தவறுகளை மறைத்த உன் சாதூர்யம் சமத்தும் தெரியும்;
மனதின் ஏக்கம் தெரியும், தங்கிருந்த துக்கம் தெரியும்;
தாங்கிய சோகம் தெரியும்;
தயங்கிய பயம் தெரியும்;
தவித்த பாசம் தெரியும்;
தடுமாறிய நெஞ்சம் தெரியும்;
தவறுகளின் தடுமாற்றம் தெரியும்;
எனவே திரும்பிப்பார்.
நீ விட்டுச் சென்ற
உன்னை விட்டுச் சென்ற பலவற்றை நினைக்கத் திரும்பிப்பார்.
திரும்பிப்பார் உன்னை தாளாட்டிய தாயின் அன்பு பாசமும் ஏக்கமும் தெரியும்;
உன்னை தாங்கிய தகப்பனின் தோள்வலி தெரியும்;
அவன் கொண்ட வைராக்கியமும் தியாகமும் தெரியும்;
நட்பின் அருமை தெரியும்;
உறவின் பெருமை தெரியும்;
நடமாடுவதின் அர்த்தம் தெரியும்;
உறவாடிய உள்ளங்களின் கனிவு தெரியும்;
ஊமையாகிய பல மர்மங்கள் தெரியும்;
உனக்குள் உறங்கிக் கிடக்கும்
சில பல கேள்விகளுக்கு பதில் தெரிய வரும்;
திரும்பிப்பார் திரும்பிப்பர் உன் இளமையை திரும்பிப்பார்;
உன் இல்லாமையை உன் இயலாமையை திரும்பிப்பார்;
வாழ்க்கையில் திரும்பிப்பார்; வாலிப குரும்பை திரும்பிப்பார்;
வாழ்ந்த வாழ்க்கையின் குதூகலம் தெரியம்;
வலிதெரியாது விளையாடிய சிறுபிராயம் தெரியும்;
வாலிப குசும்பும் தெரியும்;
சிரிப்பும் உன் கண்முன் சற்றே தோன்றி மறையும்;
திரும்பிப்பார் காலத்தின் ஓட்டம் தெரியும்;
உன் மனப்போராட்டம் தெரியும்;
திரும்பிப்பார் உன்னோடு ஒட்டிக்கொண்டிருந்தவர்கள்,
பசை காய்ந்த உடன் பவ்வியமாய் நகர்ந்து சென்றது தெரியும்;
பயத்தின் ஆழம் தெரியும்;
பயத்தின் பீதி நடுக்கம் கண்ணில் தெரியவரும்;
திரும்பிப்பார் திரும்பிப்பார்
தெரிந்து கொள்ள வேண்டியது பல இருப்பது தெரியும்;
தெரியாமல் மனதில் புதைந்த மர்மங்களும் ரகசியங்களும் சந்தேகங்களும் தெரியவரும்;
தெருவில் திரிந்த தரித்திர நாட்கள் தெரியும்;
நீ தெரிந்து கொள்வதற்காக எடுத்த ஓட்டம் தெரியும்;
தெரிந்து கொள்ள பட்ட படாடு தெரியும்;
நீ உயரத்தின் உச்சத்தை தொட பட்ட உதை வதை கதை நினைவுக்கு வரும்;
வேகமாக ஓடும் வாழ்க்கையில் எப்படி எல்லாம் வேட்டையாடப்பட்டாய் என்பது தெரியும்;
உன்னுள் உறங்கிய வெறி தெரியும்;
உன்னுள் கிடந்த வெட்கை தெரியும்;
ஆகவே தயங்காது திரும்பிப்பார்;
எனவே திரும்பிப்பார்;
திரு திரு என்று முழிக்காது திரும்பிப்பார்;
நிழலாடும் நினைவுகளின் குறும் படம் உன் மனதில் ஓடுவது தெரியும்;
நிதானம் இழந்து நீ அடைந்த கோபத்தின் உச்சம் தெரியும்;
திரும்பிப்பார், நீ போட்ட ஆட்டம் நாடகம் தெரியும்;
நீ ஓடிய ஓட்டம் தெரியும்;
நீ தவறிய நிதானம் தெரியும்;
ஒன்றுக்காக பலதுக்காக ஏங்கிய ஏக்கம், அடைந்த தவிப்பு தெரியவரும்;
நீ கண்ட மேடு பள்ளம் ஏற்றம் இரக்கம் சரிவு, சாதனை, கசப்பு இனிப்பு, துக்கம் ஏக்கம் எல்லாம் காணா மனஒலிபடமாய் மனதில் ஒலிப்பது தெரியும்;
திரும்பிப்பார் வறுமை தின்ன
வயிற்றின் கூப்பாடு தெரியும்;
அலறலும் புலம்பலும் தெரியும்;
திரும்பிப்பார் நிராசைகளின் நிரசனம் தெரியும்;
எனவே திரும்பிப்பார்,
இழந்த சுகங்களை, இழந்த சொந்தங்களை நினைக்க திரும்பிப்பார்;
வழிந்த கண்ணீரை துடித்த கரம் எது என்று தெரியும்;
நன்றே திரும்பிப்பார் சண்டாலன் யார் என்று தெரியும்;
சகுணியார் என்று தெரியும்;
மனச்சல்லடையால் சலித்துப்பார், ஒரு சல்லிகாசுக்காக சல்லி சல்லியாய் போன உன் மனத்தின்
வேதனை தெரியும்;
திரும்பிப்பார் கஷ்ட நாட்களுடன் கற்றுக் கொடுத்த நாட்களும் தெரியும்;
சொல்லி சொல்லி தீர்க்க முடியாத உன் கோபம் தெரியும்;
துள்ளியும் தள்ளியு போன உன் கால்களின் வருத்தமும் வதையும் தெரியும்;
துள்ளி துள்ளி திரிந்த நாட்களின் பசுமை தெரியும்;
திரும்பிப்பார்; திரும்பிப்பார்; மறக்காது திரும்பிப்பார்;
மறுபடியும் பிறக்கவேண்டுமா என்ற பயம் தழும்பி மனதில் எழுவது தெரியும்;
திரும்பிப்பார் திரும்பிப்பார்; நீ பிடித்த பிடிவாதம் தெரியும்;
உன்னை பிடித்த தரித்திரம் தெரியும்;
உன் சரித்திரமே தெரியவரும் எனவே திரும்பிப்பார்;
ஆகவே அடம்பிடிக்காது திரும்பிப்பார்;
நீ நீயாக இருக்க நிதானமான செயல்பட,
நீ உன் உலகத்தை புரிந்து கொள்ள,
நீ கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப்பார்;
திரும்பிப்பார் திரும்பிப்பார்;
ஒரு முறையாவது, ஒரு நாள் வாழ்க்கையாவது, ஒரு சில மணித் துளிகள் நினைக்க திரும்பிப்பார்;
திரும்பிப்பார் திரும்பிப்பார்.
காலை வணக்கத்தை கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்