அழகு தேவதையே நிலவு நீதானே

அலங்காரம் இல்லாத
இளங்காலை நீதானே
அள்ளி முடித்திடாத
கார்மேகக் கூந்தல்தானே
அத்திப்பழக் கன்னம்
தித்திப்பூட்டுது மானே
அதிலிருக்கும் மச்சம்
வெறுப்பூட்டுது தானே.

அல்லியிதழை கிள்ளியிட
ஆசையடி கண்ணே
அரளியாக வார்த்தைகள்
வடிந்திடுமோ தேனே
அன்னக்கிளியே நீயும்
மெல்லெனப் பேசிடுவாயோ
பேசிவிட்டால் காத்திருப்பேன்
பேருந்தில் நானே.

அள்ளும் அழகில் என்னைக்
கொள்ளையிட்டவளே
அங்காடித் தெருவாட்டம்
அங்கம் கொண்டவளே
அய்யனார் வீட்டு
மடிசார்க் கன்னுகுட்டியே
அழகு தேவதையே
என் நிலவு நீதானே

எழுதியவர் : ஆர் எஸ் கலா (22-Jun-24, 1:28 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 156

மேலே