புனிதம் இழந்த பாரதம்

" பாரதம் " என்னும் புண்ணிய பூமி,
பாவிகளால் நிரம்பி வழிகிறதே....
பாவிகளின் அடையாளமாக,
ஊழல்களையே கலாச்சாரமாக்கி விட்டார்களே....

சாதாரண குடிமகனில் தொடங்கி, அரசாங்க உயர் பதிவிகளில் வகிக்கும் அனைவரிடத்திலும் ஊழல்கள் நிரம்பிக் காணப்படுகிறதே....

மனித சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்த ஊழல் மாறிவிட்டதே...

பள்ளிக்கூடக் கல்வி முடிந்து, கல்லூரிக்கு செல்லும் மாணவரிடம்,
வருவாய்த் துறை அதிகாரி, கிராம ஆய்வாளர், என ஆரம்பித்து வட்டாசிரியர் வரை சாதிச் சான்றிதழ், வருவாயச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் கேட்கிறார்கள் என்றால் இங்கு ஊழல் கலாச்சாரத்தின் தாக்கத்தை உணர முடிகிறதா???....

இவ்வளவு தைரியத்தை யாரு கொடுத்தது???....

நீங்கள் தான்....

பணத்திற்கு ஓட்டை விற்ற சுய லாப வியாபாரிகளாக நீங்கள் இருப்பதே முதல் காரணமே....

" பணத்தைக் கண்டால் பிணமும் வாயைப் பிளக்கும் ", என்பதற்கு ஏற்ப பணத்தைக் கண்டால் அறிவை இழந்துவிடுகிறீர்களே...
பகுத்தறிவை இழந்துவிடுகிறீர்களே,,....

தனியொரு மனிதனில் மாற்றம் ஏற்படாவிடில்,
சமுதாய மாற்றம் , அரசியல் மாற்றம் போன்ற மாற்றங்கள் வீண் கனவாகவே அமையுமே.....

நீதித்துறையிலேயே ஊழல்கள் அதிகமாகிவிட்டபின்,
நீதி வேண்டி நீதி மன்றங்களை நாடுவதில் என்ன பயனோ???....

கல்யாணத்திற்கு முன்னே இளம் பெண்களின் கன்னித் திரைகள் கிழிக்கப்படுகின்றன....
கல்லூரி மாணவிகள் மர்மமான முறையில் இறக்கிறார்கள்....
அது கொலை என்பது தெரிந்தும், தற்கொலை என மாற்றி எழுதுவார்கள்....
குற்றவாளிகளும் வேறு பெண்ணின் மீது தைரியமாக கை வைப்பார்கள்...
இதுதான் பாரத நாட்டில் பெண்களின் நிலை....
இது குறித்து இன்னும் ஆழமாகத் தோண்டினால்,
நாற்றம் தாங்க முடியாது.....

குடும்பப் பெண்களின் துரோகம், கட்டிய கணவனை கள்ளக் காதலனோடு சேர்ந்து கொலை செய்த மனைவி ....,
இது போன்ற செய்திகளை தினம் பத்திரிக்கையில் காண்கிறோம்...,
எவ்வளவு கேவலமான நிலை.....

கல்லூரியை எடுத்துக் கொள்வோம்.,
பணம் தான் முக்கியம்...
பணம் கட்டவில்லை எனில்,
கல்லூரி பக்கம் தலையைக் கூட காட்டாதே,
அப்படியே போய்விடு, பணம் கட்டினால் வா,...
இப்படித்தான் பல தனியார் கல்லூரிகள் நடக்கின்றன....
சரி தனியார் கல்லூரிதான் மோசம்..
அரசாங்கக் கல்லூரி போகலாம் என்றால் ,
அங்கே இடம் கிடைப்பதில்லை....
சரி அப்படினு அரசு வங்கியில் போய் அவன் என்னமோ அவனுடைய சொந்தப் பணத்தை எடுத்து கொடுப்பதைப் போல , இன்று போய் நாளை வா என்று ஒரு வருடமாக நாட்களைக் கடத்தி அலைய விடுகிறான்....

இப்படித்தான் இந்தியாவில் எல்லா இடங்களிலும் ஊழல்களால் குற்றங்கள் தாண்டவமாடுகின்றன..,

சில பணக்கார விளம்பர விருப்பிகளும் ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் பிறகு படுத்துக் கொள்வதும் நன்றாக காண முடிகிறதே.....

இந்தியாவில் ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமெனில்,
தனி மனித மாற்றம் அவசியமாகிறது...
என ஊழல்களுக்கு எதிராக என் கருத்தைக் கூறிக் கவிதையை முடிக்கிறேன்......

எழுதியவர் : சிவனணைந்த பெருமாள் (18-May-16, 1:12 pm)
சேர்த்தது : அழிவில்லான்
பார்வை : 336

மேலே