புகையிலை எதிர்ப்பு தினம்

புகையிலையும் பட்டாசும் ஒண்ணு
பாதிக்கப்படுவோர் செல்லுடமிடம் மண்ணு

நம்மை நாமே அழித்து
குடும்பத்தை அழவைக்க
காசை செலவழித்து
சுவைத்திடுவோம் புகையிலையை.

இயற்கையை ஊனப்படுத்தி
உயிரனங்களையும் பிணியாளர்களையும்
பச்சிளங் குழந்தைகளையும்
அச்சுறுத்தி நடுங்க வைத்து,


இதய நோயாளிகளை
எதிர்பாரா நேரத்தில்
எமலோகம் அனுப்பி வைக்க
காசைக் கரியாக்கி
வெடித்திடுவோம் இடியோசை
முழங்கும் பாழாய்ப்போன
பட்டாசு சனியன்களை!

நமக்கு நாமே தீவிரவிவாதிகள்
நமக்கு நாம் செய்வதில் பல
நமக்குத் தருமே பேரழிவை
ஆறறிவைச் சீரழிக்கும் பாவத்திற்கு!

மே.31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்!

'தி இந்து' ஞாயிறு. மே. 29, 2016.

எழுதியவர் : தி இந்து (30-May-16, 8:00 am)
பார்வை : 174

மேலே