மழை கோடை மழை
கோடையின் உச்சம்
ஆதவன் அச்சுறத்தல்
சுட்டெரிக்கும் வெய்யலாய்
விண்ணை மண்ணை
கலங்க காய்க்குது
காற்று அனலாய் வீசுது
மண்ணோ எரிக்கும் தீபோல்
நடந்தால் காலைப் புண்ணாக்குது
பாடும் பறவைகள் கூட
பாடவில்லை, காணவில்லை
வெய்யல் தாங்காமல்
மரங்களில் எங்கோ
ஒளிந்து ஒதுங்கிட...............
திடீரென வானம் இருண்டது
ஆயிரம் ஆயிரம்
ஆண் யானைகள் கூட்டம்
போர்கோலம் பூண்டு
வருவது போல்
கார்மேக கூட்டங்கள்
விண்ணை நிறப்பிட
அந்த களிறுகள்
ஒன்றாய் பிளிர்வது போல்
இடி ஓசை ஊடே
கொடி மின்னல் ...............
ஈர மண் வாசனை
அனலாய் வீசிய காnற்று
இப்போது குளிர்ந்து வீசுது
'டொக்' 'டொக்' என்று
மழைத்துளி என்னை
சற்றே நனைத்தன
பின்னே ஒரு மாரி மழையாய்
மாறி மண்ணை நனைக்க
காய்ந்த மண்ணும் ஈரம் ஈர்த்து
இளநீர்ப் பருகிய மனித முகமொக்க
ஈரத்துடன் பொலிந்தது......
கோடையின் சீற்றம் மறைய
தன் வருகையை அறிவிக்க
நாம் மகிழ்ந்திட இயற்கை
வருகைதந்தாள் கோடை மழையாக
பருவ மழையாக !
உழவர் வயிர் குளிர்ந்திட
எல்லோரும் இனிதாய் வாழ்ந்திட !
-------------------------------------------