அந்த காலம் எங்கே

விடிந்க்து பொழுது
இன்னும் விழிக்கவில்லை இக்கால கண்கள்..
காலை சூரியனை காண காலை பத்துமணி...
கோழி கூவுமுன் கண்விழிச்சி,
வாசலில் சாணம் தெலிச்சி,
வெண்நிற அரிசிமாவில் கோலம் போட்ட கைகள்தான் எங்கே...?
யாரும் கண்விழிக்கா நேரத்தில்,
முதுகில் கலப்பையும்,
தலையில் தலைப்பாகையும் சுமந்து சென்ற கால்கள்தான் எங்கே...?
காலையில் தலைமுழுகி மஞ்சள்நிற முகமோடு,
கைநிரய வலையலும்,
நெற்றி நிறைய குங்குமம் அனிந்த பெண்கள்தான் எங்கே...?
வளையோசை குளுகுளுங்க,அம்மிசத்தம் தெருமுனை கேட்கும்.
உலை கொதிக்குமுன் வாசம் ஊரேல்ல வீசும்.
மனைவி செய்த உணவை தலையில் சுமந்து,
வரப்போடு நடக்கையில்
கணவன் உழுத சேற்று வாசத்தோடு
உணவின் வாசம் மணக்குமாம் அந்த மணம்தான் எங்கே…?
மாதம் மும்மாரி பொய்த வானம்தான் எங்கே...?
வாடும் மல்லியை வாடாமல் சூடிய மங்கைகள்தான் எங்கே...?
உழைத்து ஓய்ந்த உடலுக்கு
ஓய்வுதரும் கயத்துக்கட்டில்தான் எங்கே…?
செய்திசொல்ல பறா,
செத்த சய்திசொல்ல ஒற்றன்,
ஊருக்கு செல்ல நடைபாதை,
நடந்துச்செல்ல துனையாய் ஒரு மஞ்ப்பைதான் எங்கே…?
அநிதகாலம் போயேபோச்சு....!!
ஆனால் இன்று..
தகவல் சொல்ல PHONE, INTERNET, EMAIL….!
பக்கத்து தெரு போக CYCLE, BIKE, CAR….!
பசிக்கு உண்ன PIZZA,BURGUR…!
உலகம் மாரிகிட்டிதான் இருக்கு
மாறாத விண்னுக்கும் மண்னுக்குமிடையில்..
By_குவை,,,

எழுதியவர் : குவை.R (22-May-16, 11:02 am)
பார்வை : 133

மேலே