ஊடகங்கள்
கருத்தைச் சொல்லிடணும் புரியும் படியாக
பாமர மக்கள்கூட அறியும் படியாக
சேர்ந்து இருக்கணும் நற்செய்தி தருவதில்
விலகி இருக்கணும் அதிகாரத்திடம் விழுவதில்
தேவையான செய்திகள் முதலிடம் பிடிக்கணும்
தேவையில்லா குப்பைகள் தீயிலிட்டு அழிக்கணும்
வாய்மையின் தாள்பணிந்து வெற்றிபெற்றுக் காட்டணும்
நேர்மையின் மொழிபேசி நீதிநிலை நாட்டணும்
இளைஞர்கள் நம்பிக்கையாய் ஊடகங்கள் மாறணும்
கலைஞர்கள் வெற்றிபெற கைகொடுத்து உதவணும்
இயற்கைப் பேரிடரில் இணைத்தாய் மக்கள்சக்தி
அதன்பின்தானே உன்மேல் பலருக்கு பக்தி
ஊடகம் நீநினைத்தால் புரட்சியும் வெடிக்கவைப்பாய்
ஊடகம் நீநினைத்தால் வறட்சியும் ஒளிந்துகொள்ளும்
ஊடகம் நீநினைத்தால் கோடிமரம் உயிர்பெருமே
ஊடகம் நீநினைத்தால் கோட்டைகளும் தகர்ந்திடுமே
ஆக்கத்தை கொள்கையாக்கி மக்களை ஆண்டுவந்தால்
ஊக்கமாய் கைகொடுப்பர் நேசமாய் சார்ந்துசெல்வர்
ஊடகம் இல்லையெனில் உலகிங்கு இல்லையே
ஊடகம் இவ்வுலகின் மக்களின் சுவாசமே...