கதம்பம்

பழமொன்றியு
**************
கரும்பு தின்ன கைக்கூலி வேண்டுமா?
தாலி கட்டுவதற்கு வரதட்சினை வேண்டும் .

லிமரைக்கூ
************
கொட்டாவி விடுகிறது எட்டும்கனி.
பறிப்பதற்கு ஆளில்லாப் பரிதாப நிலையில்
பட்டமரம் ஆகிவிடும் முதிர்கன்னி.

சென்றியு
*********
இலவசம் கூடாதாம்
போதித்தார்கள் போதகர்கள்.
கேட்டுப்போனார்கள் இலவசமாய்

ஹைக்கூ
*********
அடைமானம் வைக்கவில்லை
மூழ்கிவிட்டது வீடு
வெள்ளம்.

வெண்டுறை
பனித்துளியில் முகங்கழுவும் பலவண்ணப் பூக்களுக்கும் கர்வம் இல்லை
கனிகொடுக்கும் மரங்களுமே கதைதையாய் அதைசொல்லி மகிழ்வதில்லை
தனித்துவமாய் கிளையமர்ந்து இசைக்கின்ற பறவைக்கும் போதையில்லை
மனிதனுக்கு இவைஅனைத்தும் மலைபோலே முடிவுமில்லை.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-May-16, 2:48 am)
பார்வை : 116

மேலே