அவள்
அவள்....
மேகத்தை கிழித்த நிலாவா...
மௌனமாய் வந்த
கனவா...
விழியினால் தாக்கும்
மின்சாரமா...
வழிகளில் கேட்கும்
இசைசாரமா...
நொடியில் வந்து செல்லும் மின்னலா...
மடியில் விழுந்து
போகும் பூக்களா...
ரவிவர்மன் தீட்டபட்ட கலையா..
வானை வெட்டி செதுக்கப்பட்ட சிலையா..
பூக்களில் விழுந்த பனியா..
மாமரத்தில் விளைந்த
கனியா...
கண் சிமிட்டும் நட்சத்திரமா...
கண்ணுக்கு தெரியும்
தேவதையா...
மழையில் தெரியும்
வானவில்லா...
மனதில் நுழைய வரும்
காதல் வில்லா...
தவழ்ந்து செல்லும் சேயா...
என்னை தாலாட்ட வரும்
தாயா....

