கூட்டுக் குடும்பம்
கூட்டுக் குடும்பம்.
ஆள் அறிந்து ஆசனம் போடு
பல் அறிந்து பாக்குப் போடு
ஏனெனில் உலகில்
இலை சாய்கிற பக்கம்
குலை சாயும் என்பார்
ஐங்காரம் இட்டு
அரைத்துக் கரைத்தாலும்
தன் நாற்றம் போகாதாம்
பேய் சுரைக் காய்க்கு.
அம்பரம் தன்னை
பம்பரம் ஆக்கி
தலை மயிற் கற்றைகள்
அலைந்திடும் பாம்பென
இல்லாத உண்மையை
வில்லாக வளைத்து
பொல்லாத சொற்களை
எல்லோர் மேல் எறிந்து
பெற்ற தாயையும்
உடன் பிறந்தாளையும்
உற்ற மாமியார்
இடம் பெயர்ந்திடவே
மூதேவி போலவர்
மூங்கைக் காட்டில்
முணுமுணுக்க ஏலாமல்
முறுக்கியே நின்றிட
உடையவன் அவனொ
உடைந்த மனதுடன்
ஒளிந்து கொள்வதே
ஒழியாத நிகழ்வாகும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
