எதிலும் அழகு

ஒரு சிறு குச்சி
எனினும் ஓர் அழகு
நெளிந்து, வளைந்து
விரிந்து காணும்
அழகே அழகு.

ஒரு புல்லோ
அதை விட அழகு
பசேலென்று
மிருது வாக
தளிர் போல் நிற்கும்
அழகே அழகு .

ஒரு சருகு
காற்றிலே பறந்து
சரிந்து சறுக்கி
தரை நோக்கி வரும்
அழகே அழகு.

எதிலும் அழகை
காணும் நான்
கண்டேன் மிகவே
குச்சியிலும், புல்லிலும்
சருகிலும் அவைகளின்
தனித்தன்மையிலும்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (24-May-16, 9:30 pm)
பார்வை : 702

மேலே