பெண்ணே பெருங்கவிதை

கவிதை
நல்ல நடை வேண்டும்
சொல்லில் திறம் வேண்டும்
எதுகை மோனைஎன இனிக்கின்ற வார்த்தை வேண்டும்
புதுமை கருத்துக்கள் பொங்கி வரவேண்டும்
இடைப் போலி இலக்கணங்கள் இம்மி பிசகாது
நடை பயின்று வரவேண்டும்
விடை தெரியா வினாவிற்கெல்லாம் பெரும்
விந்தையாய் வீற்றிருத்தல் வேண்டும்
சிந்தனையில் நீ வரும்போது எனதுடல் சிலிர்த்தெல வேண்டும்
செந்தமிழே உனை படிக்க பெருஞ்செல்வமெல்லாம் போதாது!

மேற்கண்ட தன்மையெல்லாம் மேதினியில் பெண்களுக்கும்
மெருகேற்றி வருவதனால் பெண்ணே நீ ஒரு
பெருங்கவிதை !!!!!!

எழுதியவர் : மரியா (25-May-16, 12:47 am)
பார்வை : 114

மேலே