அழுகவில்லை, பதறவில்லை

மாமியார் கொடுமை
அக்காலத்தில் நிறையவே.
என் அத்தை பட்ட பாட்டை
சொல்லி மாளவே முடியாது.

அத்தைக்கு முதலில் பெண் மகவு
ஒரு நாள் கோபத்தில் மாமியார்
பிறந்த குழந்தையைப் பறித்து
அறுவாள் மணையில் நறுக்க முயன்றாள்.

என் அத்தையோ இளம் வயது
அழுகவில்லை, பதறவில்லை
செய் வதை செய்யட்டும்
என்று நின்றாள் தையிரியமாக.

அவள் அறியாவண்ணம் பதறாமை
அவளிடம் வெகுவாகப் பற்றிக் கொண்டது
வென்றாள் அந்த ஆயுதத் தை வைத்து.
அவளை நோகடித்தவர்களை.

என்னிடம் சொல்லும் போது
அவள் கண்களில் ஒரு மின்னல்
ஒரு பிரகாசம் துளி நேரம் மட்டுமே
கண்களில் கண்ணீர் பொங்க
பார்க்கிறாள் கடந்த காலத்தை.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (23-May-16, 12:18 pm)
பார்வை : 1117

மேலே