ஆதியில் வசித்த அடர் வனக் குகை

நெரிசல் மிகுந்த பெரு நகரச் சாலைகளும்
சுயம் தொலைத்த கிராமத்து தெருக்களும்
பதற்றம் தருகின்றன
மேகத்தில் ஈரமில்லை பூமி கொதிக்கிறது
கணினி சுட்டியின் பின் செல்லும் வாழ்க்கை
சுவாரஸ்யத்தை இழக்கிறது
ஆற்று நீரிலும் அன்பிலும் நச்சு கலந்து விட்டது
குழந்தையின் சிரிப்பொலியை விட
ஏடிஎம் இயந்திரம் பணம் எண்ணும் ஓசையே
மனிதர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது
மண் பானையில் ஊற்றப்பட்ட தண்ணீர்
மீண்டும் மண்ணின் ஸ்பரிசம் கண்ட மகிழ்ச்சியில்
மேலும் மேலும் குளிர்வதைப் போல
மன வீட்டின் நினைவுத் தாழ்வாரத்தில்
குழந்தைகளெனத் தவழ்கின்றன பால்ய நினைவுகள்
கால இயந்திரத்தை பின்னோக்கித் திருப்பி
தாயின் கருவறைக்கோ
ஆதியில் வசித்த அடர் வனக் குகைக்கோ
திரும்பிச் செல்ல விழைகிறது மனம்

அன்பழகன் செந்தில்வேல்

எழுதியவர் : அன்பழகன் செந்தில்வேல் (25-May-16, 11:28 am)
பார்வை : 45

மேலே