ஆன்மாவைப் பற்றி நான் படித்ததில்

கனவு எப்படி ஏற்படுகிறது என்றால், எதனை ஆழ்மனதில் நினைக்கிறோமோ அதுவே கனவாக மாறுகிறது என்றாலும், இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
அதாவது ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது அந்த நபரின் உடலை விட்டு ஆத்மா, வெளி உலகத்திற்கு உலவ செல்கிறது.
ஒருநாள் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அப்போது ஒரு பக்தர், “சுவாமி எங்கள் இல்லத்தில் நாங்கள் ஒரு பூஜை செய்கிறோம். அந்த பூஜையில் நீங்கள் வந்து கலந்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.” என்றார். சுவாமிஜியும், “நிச்சயம் வருகிறேன்“ என்றார்.
அந்த பக்தர் சொன்ன தேதியில் சுவாமியின் உடல்நிலை மேலும் சரியில்லாமல் இருந்தது. அதனால் அன்று ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன் அறையை விட்டு எங்கும் செல்லவில்லை.
மறுநாள் அந்த பக்தர் சுவாமியை தரிசிக்க வந்தார்.
“சுவாமி உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் நீங்கள் என் வீட்டு பூஜைக்கு வருவீர்கள் என உறுதியாக நம்பினேன். அதன்படி வந்து கலந்துக்கொண்டீர்கள். மிகவும் நன்றி.” என்று சொல்லி ஆசி பெற்று சென்றார் பக்தர்.
அதை கேட்ட பரமஹம்ஸரின் உடன் இருந்தவர்கள், “சுவாமி.. நேற்று உங்கள் உடல்நிலை சரியில்லாததால் உங்கள் அறையில்தான் ஓய்வில் இருந்தீர்கள். ஆனால் இவரோ, அவரின் வீட்டுக்கு நீங்கள் வந்ததாக சொல்கிறாரே.?” என்று கேட்டனர்.
அதற்கு ஸ்ரீஇராமகிருஷ்ணர் பரமஹம்ஸர் சொன்னார், “என் உடல்நலம்தான் சரியில்லை, ஆனால் என் ஆத்மா ஆரோக்கியமாகதானே இருக்கிறது.”
சில நேரங்களில் ஒருவேலை செய்யும்போது, கவனம் மட்டும் வேறு எதிலோ இருப்பதைபோல, எந்த ஆத்ம சக்தி உடலை இயங்க வைக்கிறதோ, அதே ஆத்ம சக்தி உடலை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பி உடலை இயங்கச் செய்யும் ஆற்றல் கொண்டது. ஆனால் அதுவே விதிவசத்தால் திரும்ப உடலுக்குள் நுழைய முடியாதபோது, உடல், அழிய காரணமாகிறது.
நல்ல தூக்கத்தில் இருப்பவர்களை திடீரென தட்டி எழுப்பும் போது, அந்த சமயத்தில் உடலைவிட்டு வெளியுலகத்தில் உலவ சென்ற ஆத்மா லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் மீண்டும் தூக்கத்தில் இருப்பவர்களின் உடலுக்குள் வந்தடையும் என்கிறது ஆத்ம சாஸ்திரம்.
அன்றே பெரியவர்க்ள கூறியிருக்கிறார்கள், குழந்தை நன்றாக தூங்கும்போது, குழந்தையின் முகத்திற்கு பவுடர் பூசுவது அல்லது ஒப்பனை செய்வது போன்ற செயல்களை செய்யக் கூடாது. அப்படி செய்தால், வெளியேறி சென்றிருந்த ஆத்மா திரும்ப வரும்போது, முகம் மாறியிருக்கிறதே,? தமது உடல் எது என்று அறிய முடியாமல் குழப்பம் அடையும் என்பார்கள்.!
தூக்கத்தில் இருப்பவர்களை தட்டி எழுப்பக் கூடாது என்கிறது மருத்துவமும். நல்ல தூக்கத்தில் இருப்பவரை இப்படி தினமும் தட்டி எழுப்பினால் அந்த நபரக்கு மனநிலை பாதிப்பும் ஏற்படும் என்கிறார்கள்...

எழுதியவர் : (26-May-16, 2:30 am)
பார்வை : 150

சிறந்த கட்டுரைகள்

மேலே