ஆட்டு மந்தை

ஒரு காட்டில் ஒரு கொடூரமான புலி ஒன்று வாழ்ந்து வந்தது ,அந்த புலிக்கு பசி எடுக்கும் போதெல்லாம் அதே காட்டில் வசிக்கும் ஆடுகளை அடித்து திண்று கொண்டு வந்தது ,இப்படியாக புலியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது

அந்த புலி ஒவ்வொரு நாளும் அங்கு வசிக்கும் ஆடுகளை அடித்து திண்பதால் ஆடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது , மேலும் அந்த புலி நம்மில் எந்த ஆட்டை என்று கொல்லுமோ என
ஒவ்வொரு ஆடுகளும் ஒவ்வொரு நாளும் பயத்துடனே வாழ்ந்து வந்தது,

ஒரு நாள் இந்த புலியின் அட்டகாசத்தை தாங்க முடியாத ஆடுகள் காட்டின் ராஜாவான சிங்கத்திடம் சென்று புலி செய்த அட்டகாசத்தையெல்லாம் கூறி இந்த புலியை எப்படியாது அழித்து விடுமாறு ஆடுகள் சிங்கத்திடம் மன்றாடின

உடனே சிங்கம் ஆடுகளிடம் ஒரு யோசனை கூறி அனுப்பி வைத்தது, அதன்படி

அடுத்த நாள் ஒரு ஆடு ஒன்று அந்த புலியின் கண்ணில் பட மேய்ந்து கொண்டிருந்தது ,பசியோடு இருந்த புலி ஆட்டைக் கண்டதும் புலிஆட்டின் மீது வேகமாக பாய்ந்தது ஆடு தப்பி ஓடியது புலியும் விடாமல் அந்த ஆட்டை துரத்த அந்த ஆடு வேகமாக ஓடி ஒரு கிணற்றுக்குள் குதித்து விட்டது ,ஆடு இப்படி வீனாக கிணற்றுக்குள் குதித்து விட்டதே
என்று பசியோடு இருந்த புலி ஏமாற்றத்துடன் திரும்பியது

அடுத்த நாள் வேறொரு ஆடு அதே போல் அந்த புலியின் கண்ணில் பட மேய்ந்து கொண்டிருந்தது ,ஏற்கனவே பசியோடு இருந்த புலி அந்த ஆட்டை துரத்த ஆரம்பித்தது ,புலியை கண்ட ஆடு வேகமாக ஓடியது புலியும் விடாமல் அந்த ஆட்டை துரத்த இந்த ஆடும் வேகமாக ஓடி போய் அதே கிணற்றுக்குள் குதித்து விட்டது ,புலிக்கு மேலும் பசி இன்றும் ஏமாற்றத்துடனும் பெரும் பசியுடனும திரும்பியது

அடுத்த நாளும் வேறு ஒரு ஆடு புலியின் கண்ணில் பட மேய்ந்து கொண்டிருந்தது,மேலும் பசியுடன் இருந்த புலி அந்த ஆட்டை கண்டதும் துரத்த ஆரம்பித்தது ,புலியை கண்ட இந்த ஆடு்ம் வேகமாக ஓட புலி துரத்த இந்த ஆடும் மற்ற இரண்டு ஆடுகள் குதித்த அதே கிணறில் குதித்து விட்டது ,

இப்படியே மேலும் அடுத்தடுத் நாள் இரண்டு ஆடுகளை துரத்த அந்த ஆடுகளும் அதே கிணற்றுக்குள் குதித்து விட்டது

இந்த முறை புலிக்கு மேலும் பசி , புலியால் பசியை தாங்கவே முடியவில்லை , பசி தாங்காத புலி

அப்படி அந்த கிணற்றுக்குள் என்தான் உள்ளது ஏன் எல்லா ஆடுகளும் இந்த கிணற்றுக்குள்ளேயே குதித்து விடுகிறது ,நாம் இந்த கிணற்றுக்குள் குதித்து அப்படி என்னதான் இருக்கிறது என்பதை பார்த்து விடலாமா என்று ஒரு முறைக்கு இரு முறை யோசித்தது

பசி காரணமாக புலியால் சரியாக யோசிக்க கூட முடியவில்லை கொஞ்சம் நேரம் சிந்தித்து விட்டு புலி கிணற்றுக்குள் குதித்து விட்டது

கிணற்றுக்குள் ஒன்றுமே இல்லை அந்த ஐந்து ஆடுகளின் எலும்பு கூடுகள் மட்டும் தான் இருந்தது ,

கிணற்றுக்குள் குதித்ததால் புலிக்கு அடிப்பட்டு காயமாகி விட்டது,அடிப்பட்ட புலி கிணற்றை விட்டு வெளியேற முடியாமல் அப்படியே இறந்து போனது

அன்றிலிருந்து மீதியிருந்த அனைத்து ஆடுகளும் நிம்மதியாகவும் மிகிழ்ச்சியுடனும் வாழ ஆரம்பித்தது

-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (27-May-16, 1:29 pm)
பார்வை : 1090

மேலே