பக்கவிளைவுகள் அற்ற இந்தியாவின் பண்டைய மருத்துவ முறைகள்

உங்களுக்கு ஒன்று தெரியுமா நீங்கள் உண்ணும் எந்தவொரு ஆங்கில மருந்தும் தற்காலிக தீர்வை மட்டும் தான் அளிக்குமே தவிர, நிரந்தர தீர்வளிப்பது அல்ல.

இது பல ஆய்வுகள் மூலமாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து கூறப்பட்டது. நமது முன்னோர்கள் மருத்துவத்தை உணவிலேயே வைத்திருந்தனர். சொல்லப் போனால் மருந்தை தான் அவர்கள் உணவாகவே உண்டனர்.

இதனால், எந்த ஒரு உடல்நலக் கோளாறும் அவர்களிடத்தில் நிலைபெற்று இருக்கவில்லை. நீங்கள் எப்போதாவது சமீபத்தில் இயற்கை மரணம் அடைந்த ஒருவரை கண்டுள்ளீர்களா?

அதற்கான வாய்ப்பே இல்லாத அளவு உலகில் நோய்கிருமிகள் அதிகரித்துவிட்டன. இதற்கு ஒருவகையில் காரணம் தற்காலிக தீர்வளிக்கும் ஆங்கில மருத்துவம். இனி, எந்த பக்கவிளைவுகளும் இல்லாத நமது முன்னோர்கள் பண்டையக் காலத்தில் பயன்படுத்தி வந்த மருத்துவ பொருட்களை பற்றி பார்க்கலாம்.

ரோஸ்மேரி
தசை சார்ந்த மற்றும் இரத்த ஓட்டம் சீராக இருக்க, உடலை சுத்திகரிக்க ரோஸ்மேரி பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஜின்செங்
ஜின்செங் வேர்கள் பயன்படுத்தி வைக்கப்படும் டீ மயக்கம், உடற் சோர்வை போக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கவும். நுரையீரல், கல்லீரலுக்கு சக்தி அளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இஞ்சி
செரிமானம் சீராக இரத்த ஓட்டம் சீராக இஞ்சி டீ பயன்படுத்தப்பட்டது.

அதிமதுரம்
அதிமதுரம் சளி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது. மேலும், அதிமதுரம் தொண்டை கரகரப்பு, பல் வலில், ஈறு சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.

சீமைச்சாமந்தி
சீமைச்சாமந்தி டீ குடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும், குமட்டல் குறையவும் பயனளிக்கும் திறன் கொண்டதாகும்.

யூக்கலிப்டஸ் எண்ணெய்
தொண்டை கரகரப்பு, காய்ச்சல், ஃப்ளூ, இருமல் போன்றவைக்கு யூக்கலிப்டஸ் எண்ணெய் சிறந்த நிவாரணம் அளிக்கவல்லது.

ப்ளாக் ராஸ்பெர்ரி
ப்ளாக் ராஸ்பெர்ரி வேர்கள் கொண்டு தயாரிக்கப்படும் டீ, வயிற்றுப்போக்கு, இருமல், மற்றும் குடல் சார்ந்த கோளாறுகளுக்கு பயன் அளிக்கும் திறன் கொண்டது.

சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாய் வலியை குறைக்கும் தன்மை கொண்டதாகும். மேலும், இது அஜீரண கோளாறு மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

கற்றாழை
காயங்கள் ஆற்றவும், புண்கள் சரியாகவும், பூச்சிக் கடிகளுக்கு மருந்தாகவும் ஓர் மூலிகை மருந்தாக கற்றாழை பயன்படுத்தி வரப்பட்டுள்ளது.

பிளாக்பெர்ரி
பிளாக்பெர்ரியின் இலைகள் மற்றும் வேர்கள் கொண்டு தயாரிக்கப்படும் டீ எரிச்சல் உணர்வு குறைய, வயிற்றுப்போக்கை சரிசெய்ய, வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க, தொண்டை கரகரப்பு சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (27-May-16, 7:55 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 85

சிறந்த கட்டுரைகள்

மேலே