மயிலிறகான உன் கூந்தல் முடிகள் 555

என்னவளே...
நீயும் நானும் செல்லும் நம்
கல்லூரி பேருந்தில்...
எதார்த்தமாக நாம் இருவரும்
ஒன்றாக அமர்ந்தோம்...
ஜன்னலோரம் காற்று
மெல்ல வீச...
மயிலிறகாய் என்
முகத்தில் வருடியது...
காற்றில் அசைந்த உன் கூந்தலின்
சில முடிகள்...
மெல்ல நீ விரல்களால்
ஒதுக்கினாலும்...
மீண்டும் மீண்டும் என்
முகத்தை நோக்கியே...
சின்ன சின்ன எதார்த்த உரசல்களில்
என்னை நான் மறந்தேனடி...
இறங்கவேண்டிய இடம் வந்தும்
நான் இறங்காமலே உன்னுடன்...
உன் மனதில் நீ நினைத்ததை
சொல்லாமல் சொன்னது உன்முகம்...
சில விசயங்களுக்கு
வார்த்தைகள் தேவை இல்லை...
சில நேரங்களில்...
அதுதானடி உன் காதலை
நான் உணர்ந்த தருணம்.....