27-5-16 தினம் ஒரு தத்துவ பாட்டு - 13 =117

ஊரூ நல்ல ஊரூ! - இதுல
ஏழை என்பவன் யாரு ?
ஏறு போல உழைத்தும் – அவன்
ஒதுக்கப்பட்ட விளக்குமாறு !
பேரு பெத்த பேரு – எழைக்கு
ஏது நிரந்தரச் சோறு ?
தாரு போடாத ரோடாய்
தினம் வாழ்க்கையோட தகராறு !

மேடைப்போட்டு கூட்டம் சேத்து
தொண்டைக்கிழிய கத்துரான் ஒருத்தன்
துண்டைப்போட்டு துட்டை கொடுத்து
திண்டைப்பிடிக்க ஏங்குறான் ஒருத்தன்
சண்டைப்போட்டு சட்டையக் கிழிச்சி
மண்டை ஒடிஞ்சி ஓடுறான் ஒருத்தன்
அண்டை நாட்டில் அக்கவுண்ட்டு வச்சி
சொந்த நாட்டை சுரண்டுரான் ஒருத்தன்

மொத்தத்தில் அவன் பேச்சில்
நியாயமில்லை..; நியாயமில்லை !
சுத்தத்தில் அவன் வாக்கில்
உண்மையில்லை..;உண்மையில்லை !
ரத்தத்தில் அவன் உடம்பில்
நல்ல ரத்தம் ஓடவில்லை ஓடவில்லை !
பித்தத்தில் அவன் தலையில்
நல்ல வார்த்தை ஏறவில்லை ஏறவில்லை !

பின்ன எதுக்கு அவனுக்கு ஓட்டு ?
நேரம் பாத்து வைக்கவேணும் வேட்டு !
காலப்பிடிப்பான் வாக்கு கேட்டு
அவனுக்கு கண்ணாமூச்சு காட்டு !
தட்டில் போடுவான் துட்டு
அதை நி துச்சமாக கருது !
எச்ச சோத்துக்கு அலைந்தால்
நம் இலட்சியம் நிறைவேறாது !

ஏழை குற்றம் செஞ்சா
அவனை உடனே உள்ளேப்போடுறான் !
ஏஜமான் குற்றம் செஞ்சா
அவனை மொதல்ல பதுக்கப் பாக்குறான் !

நாட்டினிலே தலைவர்களுக்கு…
தொண்டர்கள் பஞ்சம் வருவதில்லை !
அவர்கள் வீட்டினிலே காவலுக்கு
குண்டாஸ் படைகள் குறைவில்லை…!
ஊழலை ஒழிப்பதாய் சொல்லிதான்
ஒவ்வொருவனும் ஆட்சியைப் பிடிக்கிறான்
ஏழைகளின் வாழ்வை உயர்த்துவதாய்
ஒவ்வொரு கட்சியும் முழங்குறான் !

சுதந்திர நாட்டில் எல்லோருக்கும்
தார்மீக உரிமை இருக்கு !
தைரியமாக எதிர்த்து கேட்பவனுக்கு
ஜெயில் கம்பிகள் காத்து கிடக்கு !
இதுதான் அரசியல் தந்திரம் - இதெந்த
அரசியல்வாதியும் மறக்காத மந்திரம்
இவர்களிடம் ஏழையென்பவன் எம்மாத்திரம் ?
அவன் ஓட்டுப்போடும்போது மட்டுமே உயர் ரகம் !

எழுதியவர் : சாய்மாறன் (29-May-16, 11:31 am)
பார்வை : 105

மேலே