ஞாயிறு போற்றி
கோடை வெயில்
கத்திரி வெயில்
அக்னி வெயில்
நாமகரணங்கள்
எத்தனை எத்தனையோ
உனக்கு
யாவையும் உன்
திறனை எடுத்துரைக்க
போதுமா ?
சுடரொளி விட்டு
பாயும் நீ
ஓரு நாளைப் போல
அல்ல.
இன்று தண்ணொளியாய்
நாளை பேரொளியாய்
மறு நாள் சுடரொளியாய்
காட்சி தருவாய்.
மேலாக சுட்டெரிக்கும்
தணலை வாரி வாரி
வீசுவாய் பொழுதுகளிலே
தாங்கவும் தாங்காதவாறும்
கொடுத்தும் கொடுக்காதவாறும்
நின்று தடங்கு இல்லாமல்
வழங்கும் கதிரவனே
ஞாயிறு போற்றி !