தீவிரவாதி Vs அரசியல்வாதி

ஒரு கார் டிரைவர் சென்னை சட்டசபை அருகில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார் .

திடீரென்று ஒருவர் வந்து கார் ஜன்னல் கண்ணாடியை தட்டினார். டிரைவரும் கண்ணாடியை இறக்கி,
"என்ன நடக்கிறது இங்கே? ஏன் இவ்வளவு டிராபிக் ஜாம்?" என்று விசாரித்தார்.
அவர் சொன்னார் ......

"தீவிரவாதிகள் எல்லா அரசியல்வாதிகளையும் பிடித்து வைத்துகொண்டு, அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ஒருவருக்கு 100 கோடி பணம் கொடுக்க வேண்டுமாம்....இல்லையென்றால் அவர்களையெல்லாம் மொத்தமாக பெட்ரோல் போட்டு எரித்து விடுவோம் என்று மிரட்டுகிறார்களாம். .. அதனால் நாங்கள் கார் காராக சென்று வசூல் செய்கிறோம் "

"எல்லோரும் எவ்வளவு கொடுக்கிறார்கள் தோரயமாக ?" என்று அந்த கார் டிரைவர் கேட்டார்.
அதற்க்கு அந்த மனிதர் சொன்னார்,
"ஆளுக்கு இரண்டு லிட்டர்"

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-May-16, 7:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 131

மேலே