சோடிப் பறவைகள் பிரிந்திடுமோ
ஏதேதோ?...
எண்ணங்கள் கொண்டு
உன்னைக் காண ஓடி வந்தேன்.....
கண்ணாடிக் கூண்டுக்குள் நீ சென்று
கண்களுக்கு வழி விட்டு
காதுகளுக்கு
ஏனோ?... திரையிட்டுக் கொண்டாய்......
கண்கள் பேசும் மொழிகள்
நீ கேளாது
மனதையும் மூடி மறைத்தாய்......
வழியின்றி வலியில் தவிக்கிறேன்
இதுதான் என் வாழ்வோ?...
நினைக்கையில்
அனையவிருக்கும் தீபமாய் துடிக்கிறேன்......
நீ கேட்காத மொழிகளில்
பேசாது ஊமையானதால்
உன்னால் என்னில் மலர்ந்தப் பூக்கள்
முட்களாய் மாறி நெஞ்சை
நஞ்சாய் தைக்குதே.......
என்ன நேர்ந்தது உனக்கு
நானிருக்கும் இதயம் உடைத்து
அமிலம் பொழிய முயற்சிக்கிறாய்......
உன் வாய் மொழியும்
வார்த்தையிலே உள்ளது
முதலா?... முடிவா?...
என் வாழ்க்கையின் தீர்மானம்......
ஒரு வானில் இதய வானில்
வாசம் செய்தோம் காதல் பறவைகளாய்...
இணைய விடாது பிரித்து
விதியோ?... சதியோ?...
சொந்தமோ?... பந்தமோ?...
வென்றிடுமோ?... நம் காதலை
உன் வாய் மொழியும்
வார்த்தையிலே உள்ளது
முற்றுமா?... வளருமா?...
நம் காதல்.........