மாலை நேர மயக்கம்
அந்தி சாயும் பொழுதில்
அல்லிகள் மலர வந்தவளே...
பனி விழும் இரவில்
ஊதக் காற்றாய் எனைத் தொட்டவளே......
மார்கழி மாதப் பூக்களாய் நீ
மணம் வீசும் வேளையில்
தேன் வண்டுகளாய் நெஞ்சம் பறந்தேன்......
எனையும் கொஞ்சம் மறந்து
வீசுமந்த வாடைக் காற்றில்
உன் வாசனைத் தேடியே அலைந்தேன்......
அந்தி சாயும்......
ஒரு நாள் உனை காணாவிடில்
வானில் தேயும் பிறையாக
என் நெஞ்சமோ?... தேய்கின்றது......
நீ காட்சி தரும் நேரத்தில்
கண் இமையும் நொடியினில்
மீண்டும் வளர் பிறையாய் ஆகின்றது......
மலர்களை சுமந்தச் சோலையே
உன்னாலே ஆகிறேன் மழலையாய்...
உன் மடியினில் தலைச் சாயவே
துடிக்குது எந்தன் இதயம் பாவையே...
பிரமன் வியந்த சிலையும் நீயே.....
அந்தி சாயும்......
விலகி விலகி தூரம் செல்லும்
ஸ்பரிசிக்க இயலாதக் கானல் நீரும்
பொற்பாதம் தீண்டும் இச்சையில்
ஆழியின் அலைகளாய் கானலே உனை நெருங்கிடுமே......
என் தேகத்தினுள் விருட்சமாய் நீ முளைத்து
காதல் தந்த தேவியே
கண்ணில் வந்த ஒளியே
என் பார்வைக்கு நீதான் கருவிழியே......
அன்பால் எனை அனைக்கும் போதும்
பாசத்தால் எனைத் திட்டும் போதும்
கண்டேன் என் தாயின் முகம் உன்னிடமே......
அந்தி சாயும்......