மனம் வருடும் மயிலிறகு - 3

என் சட்டையின்
வண்ணங்களுக்கு
பின்பும்
வெகுதொலைவில்
வண்ணங்களால்
அறியமுடியா
என் எண்ணங்கள்....!

புதுச்சட்டை ....
புத்தகப்பை...
வகைவகையான மிட்டாய்கள்....
இருகரம் பற்றி
உடன் வந்த பெற்றோர்....!

கண்ணை மீறிய
கண்ணீரும் ....
சொல்லிய கதைகள்
ஏராளம்....!

என் மனச்சுமைகளை
புத்தகப்பையுடன்
சுமந்து
வகுப்பறையில் நுழைகிறேன்....!

(மீண்டும் வருடும் )

எழுதியவர் : Geetha paraman (31-May-16, 6:44 pm)
பார்வை : 92

மேலே