காத்திருக்கும் மேகம்
தொலைதூர வருகையிலே
தூள்தூளாய் ஆகிறேன் - நான்
தொலைதூர பார்வைக்கே
துடித்துபோய் விழுகிறேன்!!
எந்த ஊர் சேலையோ
எட்டுவூர் ஜொலிக்குது - என்னை
என்ன செய்ய நினைக்குதோ
எங்கெங்கோ வேர்க்குது!
நாலு திசை திரும்பியும்
நாகம்மா தெரியுறாள் - எனக்குள்
நான்கு அறை இதயத்திலே
நாகம்மா குதிக்கிறாள்!
கண்ணிரண்டில் மை வைத்து
கரண்டுபோல் இழுக்குறாள் - என்னை
கம்மலில் தொங்கவிட்டு
குத்துச்சண்டை பயில்கிறாள்!
கல்பதித்த சேலை போல
கன்னிமேனி மினுக்குது - அவள்
கால்பதிந்த மண்ணுக்கு தான்
ஆயுள்நாள்கள் கூடுது!
தண்ணிக் குடம் எடுக்கையிலே
தங்ககுடமாய் மாறுது - அவள்
வீசி எரியும் கற்கள்தான்
வைரமாய் விழுகுது!
கனவில் வந்து பந்தாடும்
காரிகையே வாராயோ! உன்னை
கால மெல்லாம் தாங்கிருப்பேன்
சம்மதத்தை தாராயோ!!