தர குறைபாடு - கல்வி வாய்ப்பிலும் மற்றும் வேலைவாய்ப்பிலும்
அரசாங்கத்தை குறை சொல்வது
இந்த கவிதையின் நோக்கமல்ல,
சில பொறுப்புள்ள மனிதர்களின்
உடனடி கவனத்தை ஈர்க்கவே..!
கல்வி என்பது எல்லோருக்கும்
பொதுவான உரிமை என்கிற
சமூகம் இது, எனில் நடப்பதென்ன?
வீணாய் விளம்பரத்தில் செலுத்தும்
அக்கறையை கூட்டி அனுசரணை
காட்டினால் தான் என்ன?
மாற்றுத்திறனாளிகளுக்கு
கல்வி வாய்ப்பு வசதிகள்
சாதனங்கள் ஆசிரியர்கள்
குறைந்து வருகின்றன.
- இது செய்தி நியூஸ் 7-ல்.
உங்கள் நெஞ்சை தொட்டு
சொல்லுங்கள், கல்வியின்
தரம் பிளஸ்டு மார்க்கில் அல்ல,
நம் ஆசிரியர்களின் தரத்தில்.
தரமில்லாத ஆசிரியர்கள்
எண்ணிலடங்கா இங்கே ஒருபுறம்,
மாணவன் ஆசிரியர் விகிதாச்சாரமும்
கேள்விக்குறியாய் அடித்து சொல்ல
ஆதாரங்களுடன்.
சில மாதங்களுக்கு முன்
மாற்றுத்திறனாளிகள்
வேலை வாய்ப்புகளுக்காக
போராட்டம் நடத்தியதை
எல்லோரும் மறந்து போயினர்.
இன்று பி.ஈ முடித்து விட்டு
சென்னை சில்க்ஸில் சேல்ஸ் மேனாக
வேலையில் இருப்பவர்களை
கொஞ்சம் கவனியுங்கள்.
என்பது லட்சம் என்ஜிநியர்கள்
வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்க
இவ்வாண்டு எஞ்சினியரிங் சேர
விருப்பம் குறைந்து போகிறது.
இதுவா இளைஞர்கள் நிறைந்த
இந்திய நாட்டின் லட்சணம்?
பதில் வேண்டும், இப்பொழுதே,
யாரங்கே, பதில் தர பொறுப்புடன்.
தேடினால் கிட்டுமா?
ஒளிரும் இந்தியா என்றோ
முன்னேற்றப்பாதையில் நாம் என்றோ
எண்ணிக்கொண்டு ஏமாறாதீர்கள்,
ஏமாற்றாதீர்கள், இன்னும் இனியும்.